Monday, July 5, 2021

நீதியை கொல்லும் திமுக அரசு : அருள் முத்துக்குமரன்


இவ்வளவு பெரிய அதிகார குவியலை சூத்திர சமூகத்துக்கு தமிழகம் முழுதும் நீதிமன்றம், காவல்துறையில் கொடுத்தால் அங்கு எப்படி தலித்தகளுக்கு நீதி கிடைக்கும். ஆகவே திமுக அரசு, நேரடி வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் சமீபத்தில் 44 அரசு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்துக்கு 29 வழக்கறிஞர்களையும் மதுரை உயர்நீதி மன்றத்துக்கு 15 வழக்கறிஞர்களையும் நியமித்துள்ளது.
நியமிக்கப்பட்ட 44 வழக்கறிஞர்களில் பெரும்பாலும் சூத்திர சமூகத்தை சார்ந்தவர்களே இருக்கிறார்கள். இந்த நியமனம் சத்தமில்லாமல் நடந்துள்ளது. உரிய பிரதிநிதித்துவம் தலித் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து கீழமை நீதிமன்றம் மற்றும் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெற உள்ளது. அதில் தலித் வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் திமுக அரசு வழங்க வேண்டும்.
தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு வழக்கறிஞர் குறைவான எண்ணிக்கையில் இடஒதுக்கீடு முறையில் நிரப்புகிறார்கள். தேர்வின் மூலம் நியமனம் பெரும் வழக்கறிஞர்கள் குறைந்தது 3 ஆண்டுக்கு குறைவான தண்டனை பெரும் வழக்குகளில் மட்டுமே ஆஜராக முடியும் என்கிற நிலையுள்ளது. இது அவர்களுக்கும், சமூகத்துக்கும் இழைக்கபடும் அநீதி.
அரசு நேரடியாக நியமனம் செய்யும் வழக்கறிஞர்கள் அனைத்து வழக்குகளையும் வாதாடலாம். இதுபோன்ற நீதி துறையின் தவறான அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர திமுக அரசு முயல வேண்டும்.
தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு அனைத்து வழக்குகளையும் கையாளும் அதிகாரத்தையும், அரசு நேரடி நியமனம் செய்யும் வழக்கறிஞர்களை இடஒதுக்கீடு மூலமும் நிரப்ப திமுக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
உதாரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் கடலூரில் இயங்கும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 25 க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்குகின்றன. ஆனால் அதில் ஒருவர் மட்டுமே தலித் மற்றவர்கள் அனைவரும் சூத்திர சமூகமே, இங்கு இடஒதிக்கீடு பின்பற்றப்பட்டால் 4 அல்லது 5 தலித் வழக்கறிஞர்கள் இடம்பெறுவர். இது தலித் சமுகத்துக்கு செய்யும் துரோகம்.
ஒரு அரசு வழக்கறிஞரின் அதிகாரம் நீதிமன்ற வழக்குகளோடி நின்றுவிடாது அந்த நீதிமன்றதுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையமும் அவர் கட்டுப்பாட்டில் வரும் அந்த வழக்கறிஞர் சொல்வதுதான் காவல் நிலையத்தில் எடுபடும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
இவ்வளவு பெரிய அதிகார குவியலை சூத்திர சமூகத்துக்கு தமிழகம் முழுதும் நீதிமன்றம், காவல்துறையில் கொடுத்தால் அங்கு எப்படி தலித்தகளுக்கு நீதி கிடைக்கும். ஆகவே திமுக அரசு, நேரடி வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும்.
இதை தவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும். அப்படி வழக்கறிஞர்கள் நியமிக்கும்போது அரசியல் சார்பற்று, நேர்மையான மற்றும் சட்டதுறையில் அனுபவம் உள்ளவர்களை பணியமர்த்த வேண்டும்.
வன்கொடுமை வழக்கை வாதாடும் வழக்கறிஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் எதிர் தரப்புக்கு அதாவது சாதி வெறியர்களுக்கு துணை போகிறார்கள் அப்படி சோரம் போகிறவர்களையும் நியமனம் செய்யக் கூடாது.
வன்கொடுமை வழக்கில் வழமையாக கடைப்பிடிக்கும் நடைமுறையை மாற்றி விரைவில் தீர்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மற்ற வழக்குகளை விட வன்கொடுமை வழக்குகளின் தீர்ப்புக்கு காலம் வேண்டுமென்றே அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுவே இந்த வழக்கை நீர்த்துப்போக வழிவகை செய்கிறது.
வன்கொடுமை வழக்கை வாதாடும் வழக்கறிஞர்களுக்கு உரிய சுகந்திரமும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் போதுமென்று சொல்கிற வரை அரசு உரிய பாதுகாப்பு கட்டாயம் தர வேண்டும்.
சிறைச்சாலைகளில் தலித்தகள் அதிகம் இருப்பதற்கு தெரியாமல் குற்றத்தில் ஈடுபடுவது ஒன்று, மற்றொன்று சாதாரண குற்றத்துக்கும் காவல்துறை அதிகாரிகள் சாதிவெறியுடன் தலித்தகள் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதும் முக்கிய காரணம். இந்த நிலையை மாற்ற அரசு வழக்கறிஞர் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் தலித்தகளுக்கு வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் கண்ணகி முருகேசன் படுகொலை வழக்கும் அடங்கும். இவ்வழக்கு 18 ஆண்டுகள் கடந்தும் தீர்ப்புக்காக காத்துகொண்டு இருக்கும் நிலையில் உள்ளோம். இப்படியான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க நீதிமன்றத்துக்கு அரசு அழுத்தம் தர வேண்டும்.
வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் 7 மாவட்டத்தில் மட்டுமே தற்போது அமைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டம் கூறுவதுபோல், அனைத்து மாவட்டத்துக்கு சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்க திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் தேங்கியுள்ள வழக்குகள் விரைந்து நேர்மையாக விசாரிக்க உதவும்.
உடனடி செயல்திட்டமாக குறைந்தபட்சம் நமது நான்கு VCK சட்டமன்ற உறுப்பினர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட நீதி மன்றத்தில் தலித் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். நீண்ட கால திட்டமாக நீதித்துறையில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற தொடர் போராட்டத்தின் மூலம் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
பொதுவாக வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பது நீதியை மட்டுமே, ஆனால் அவர்களுக்கு கிடைப்பது காலதாமதமாக அநீதி மட்டுமே. இதனால் மக்கள் அரசு, காவல் துறை மற்றும் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். இது ஆரோக்கியமான சமுகத்துக்கு நல்லது இல்லை.



No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...