Monday, July 5, 2021

விளக்கொளி : அன்பு பொன் ஆதிமன்னன்

 


28.06.2021 அன்று என் தந்தையின் நினைவு தினத்தை நினைவுகூர்ந்த அனைவருக்கும் என் குடும்பத்தினர் சார்பில் என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.என் தந்தை என்னிடத்தில் கூறிய ஒரு வார்த்தை இன்றளவும் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்தது உள்ளது-அவர் என்னை விட என் சமுதாயம் பொற்றுதலுக்கூரியது அளவிடமுடிய பெருமைக்குரியது என்னை பெருமைப்படுத்து வதை விட நான் கடும் இன்னலுக்கிடையே கண்டறிந்து பதிவு செய்து வைத்துதிருக்கும் சமுதயத்திற்கான வரலாற்று செய்திகளை வெளியிடுவதே என்னை சிறப்பதற்கு ஒப்பாகும் என்று கூறுவார்.

என் தந்தை பதினைந்து வயதில் கையெழுத்து பத்திரிகையில் தொடங்கி இரூபதாவது வயதில் பறையர் இன வரலாற்றுக்கான தரவுகளை தேட ஆரம்பித்தார். பின்னர் அவர் தொல்லியல் துறையில் பணி அமர்ந்தது அதற்கு ஒரு வலுவான ஆதரவாய் அமைந்தது
இதை அவர் சேமித்து வைத்திருக்கும்
கையெழுத்து குறிப்புகள் எனக்கு உணர்த்தியது.-அவர் திசைவழி போக்கு மடைமற்றம் அடைந்தது பறையர் இன மக்கள் திராவிடகருத்தியலால் நிலை தடுமாறிய போது தான்-இந்த இனத்திற்காக பாடுபட்ட தலைவர்களையும் அவர்களின் அரும்பெரும் தொண்டுகளும் எல்லா
மக்களுக்கும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க
வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட
போதுதான்.
என் தந்தை எனக்களித்த வரலாற்று
குறிப்புகள் சில என்னை மலைக்க வைத்திருக்கின்றன -தொல்குடி இன
மக்களின் ஏச்சங்கள் கிடைக்கும் இடங்கள் பெரும்பாலும் பறையர் குல
மக்கள் இடங்களுக்கு அருகாமையிலும் அவர்கள் வாழ முடியாமல் கடந்து போன இடங்களாவோ தென்னேடுங்காலத்தகற்கு முன்பியிருந்தே இந்த மக்கள் வாழ்ந்த
மண்னை அபகரித்து பிடுங்கி எறியப்பட்ட இடத்தின் அருகாமையிலே தான் தன் அனுபவத்தில் கண்டதாக கூறுவது
உண்டு.
சென்னை பட்டணம் என்பது இரண்டு பறச்சேரிகளின் தொகுப்பு
(பெரிய பறச்சேரி சின்ன பறச்சேரி)
என்று ஆங்கில அரசு ஆவணங்கள்
கூறும்(vestiges of old madras -henry
Davison love)இதில் வேப்பேரி,புரசை
வாக்கம்,எழும்பூர்,சேத்துப்பட்டு,மக்கி
தோட்டம்,ஆயிரம் விளக்கு,நுங்கம்பா
க்கமா, ஆல்தோட்டம் என்பன பிரதான
மான பகுதிகள். இதில் ஆல்தோட்டம்
என்பது ஆல்ஸ் என்ற ஆங்கிலேயர்
க்கு சொந்தமானது மக்கிதோட்டம்
மக்கின்ஸ் என்ற ஆங்கிலேயர்க்கு
சொந்தமானது .இதைபோன்றே
லான்டன் என்ற ஆங்கிலேயருக்கு
சொந்தமான தோட்டம் எழூம்பூர் சேத்துப்பட்டு வேப்பேரி புரசைவாக்க
ம் நடுவில் அமைந்திருந்தது அந்த
லான்டன் தோட்டத்தில் தான் இன்றய
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியும்
மருத்துவமனையும் அமைந்துள்ளது
இந்த பகுதி கடந்த காலத்தில் பறைய
இன மக்கள் மட்டுமே வாழ்ந்த பகுதி
யாக இருந்தது என்பது குறிப்பிடத்தக
து. இம் மருத்துவமனையை லன்டன்
தோட்ட ஆஸ்புத்திரி என்று நம் மக்கள்
அழைப்பார்கள்
இந்த லான்டன் தோட்டத்திற்கு அருகில் உள்ள இடத்தில் (இந்த இடம்
தற்போது ஈகா திரையரங்க்கு எதிரில்
மீன் கண்காட்சியகமாக உள்ளது. அதை சூளைப்பள்ளம் என்று கூறுவா
ர்கள் என்று என்னிடம் ஐயா சக்தி தாசனார் கூறினார்) பண்டைய தொல்குடி மக்களின் முதுமக்கள் தாழி
களை கண்டறிந்ததாக கூறுகிறார்
ஆய்வாளர் எல். ஏ.காமொயட்டி (ancient soak pit at chetpet -madras-indian
antiquary -vol-61 ,1932.)மேலும் அவர்
அந்த லான்டன் தோட்டம் ஒரு பண்டைய கிராமத்தின் புதைவிடம்
என்று உறுதிபடுத்துகிறார் ,அங்கு
அகழ்ந்து எடுக்கப்பட்ட தங்க அனிகலன், மண்பாண்டம்,சிவப்பு
நீல மணிகள் கற்கைகோடாரி மற்றும்
அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தி
பொருள்களும் ஆதிச்சநல்லுரில்
வாழ்ந்த மக்கள் பயன்படுத்தி பொருள்களும் பொருந்தி நிற்ப்பதை
உறுதி செய்கிறார். பண்டைய
ஆதிச்சநல்லூர் நாகரீகம் பறையர்
பட்டணமான மெட்ராஸ் வரை நீண்டு
இருப்பது இம் மக்களின் தெண்மை
க்கு சான்றாகும் என்பதை யாரும்
எந்த வகையிலும் மறுத்துவிட
முடியாது

No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...