Tuesday, June 1, 2021

புலவர் வே பிரபாகரன் அவர்கள் மறைவு.: வெண்ணிலவன் கொற்றவை

 
                                              

ச்செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கு ஆளானேன். ஒரு மாதத்திற்கு முன்பு கூட அவரிடம் பேசினேன். அவர் வைத்திருக்கக்கூடிய ஆவணங்களை முறையாக பாதுகாப்பதற்கான உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் சொல்லுங்கள் ஏற்பாடு செய்கிறேன் என்று அவரிடத்தில் உறுதி அளித்தேன். அவரும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
அயோத்திதாச பண்டிதர் மீது தீராத அன்பும் பற்றும் கொண்டு கடைசிவரை இயங்கிய பெருந்தகையாளர். எம்சி ராஜா, இரட்டைமலை சீனிவாசனார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து விரிவாக பேசக்கூடிய திறனும் ஆய்வு புலமையும் பெற்றிருந்தவர் புலவர் அவர்கள்.
தமிழக அரசு பண்டிதர் அயோத்திதாசர் விருதினை வழங்கி அவரை கௌரவித்தது. தன்னுடைய இறுதி மூச்சு வரையில் பண்டிதரின் எழுத்துக்கள் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்து பணியாற்றிய புலவர் திடீரென மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பத்து நாட்களாக புத்தகங்களை செம்மைப் படுத்துவதில் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த புலவர், கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இயற்கை எய்தி இருக்கிறார்.
இவரது மரணத்தை கொரோனா கணக்கில் சேர்க்காமல் உடலை நல்லடக்கம் செய்வதற்கு அரசு உதவ வேண்டும்.
தலித் மக்களின் வரலாறு தெரிந்தவர்கள் இப்படி மறைந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. இளையதலைமுறை இந்த இழப்பை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புலவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கௌதம சன்னா
துணை பொது செயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...