Sunday, July 4, 2021

இம்மாநாடுகளின் நோக்கம் என்ன? : அருள் முத்துக்குமரன்

 



மேற்கண்ட விமர்சனம் கட்சியின் மீது சாதாரண மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இதனை கருத்தில் கொண்டு கட்சியின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தி தலைவர் ஆக்கப்பூர்வமாக பணிகளை தொடர்ந்து செய்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.



விடுதலை சிறுத்தைகள் கட்சி எண்ணற்ற தொடர் மாநாடுகளை நடத்தியுள்ளது. ஆனாலும் இம்மாநாடுகளின் நோக்கம் என்ன? இதில் கொண்டுவந்த தீர்மானங்கள் என்ன? இம்மாநாடுகளின் நோக்கம் மற்றும் கொண்டுவந்த தீர்மானங்களை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதா?
எனக்கு தெரிந்து ஒரு பிரச்சனையை பேசி அதனை தொடர்ந்து விவாதமாக்கி அரசுக்கு அழுத்தம் தந்து ஏதேனும் ஒரு கோரிக்கையை வென்றெடுத்துள்ளதாக தெரியவில்லை.
உதாரணமாக 2005 யில் பஞ்சமி நில மீட்பு மாநாடு VCK நடத்தியுள்ளது. அதனை அடுத்து 2021ஆம் ஆண்டில் பஞ்சமி நில மீட்புக்கு ஆணையம் அமைக்க சொல்லி முதல்வரிடம் மனு அளித்துள்ளனர். இந்த 16 ஆண்டுகால இடைவெளி நமக்கு எதை உணர்த்துகிறது. இந்த கால இடைவெளியில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
மண்ணுரிமை மாநாடு மற்றும் பஞ்சமி நில மீட்பு மாநாடு இரண்டின் வேறுபாடு என்னவென்று வெகுநாட்களாக தேடியும் எனக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இப்படி ஏராளமான மாநாடுகளை சொல்லலாம்.
கல்விப் புலத்தில் நான் இயங்குவதால் கூறுகிறேன். கல்விக்கென்று முக்கியத்தும் கொடுத்து போராட்டம் நடத்தியதாக நான் அறிந்ததில்லை. சேலத்தில் கல்வி உரிமை மாநாடு மட்டுமே நடந்துள்ளது. அதற்கு பிறகு அது குறித்த தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. மாநாடுகள் பெரும்பாலும் தலித் மக்களின் பிரச்சனையை ஒட்டியே நடைபெறுகிறது. ஆனால் எதிர்கால வாழ்வியல் திட்டம் மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பாக எந்த போராட்டத்துக்கும் முக்கியத்துவம் தந்ததாக தெரியவில்லை.
இரட்டை வாக்குரிமை மாநாடு 2005 யில் நடைபெற்றது ஆனால் அதன் பிறகு அதைப்பற்றி பேசவேயில்லை. இப்படி பேசாத மாநாடுகளே அதிகம்.
இத்தனை மாநாடுகள் நடந்தும் சமூக மாற்றம் ஏதும் நிகழவில்லை. மாநாடுகள் தோல்வியை சந்தித்துள்ளன. இம்மாநாடுகள் தோல்வி குறித்து கட்சி இதுவரை ஏதேனும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியுள்ளதா? கட்சியில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தீர்மானங்கள் குறித்து தலைமைக்கு அழுத்தம் தந்துள்ளார்களா? என்று தெரியவில்லை.
ஒவ்வொரு மாநாட்டின்போதும் தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். அது அவர்களின் வருமானத்துக்கு அதிக செலவாக அமைக்கிறது. இச் செலவீனங்களை சமாளிப்பதற்காக பொறுப்பாளர்கள் தவறான வழியில் பொருளாதார ஈட்டும் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் அவப்பெயர்களுக்கும் உள்ளாகிறார்கள். ஆனாலும் அவர்களின் உழைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவை வீணாக போவதையே உணரமுடிகிறது.
கட்சியின் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் தினக்கூலியாக இருப்பதால் கட்சிக்கு ஆதரவாளர்கள், அரசு ஊழியர்கள், கடைகள் மற்றும் சொல்ல முடியாத இடங்களில் இருந்து பணத்தை வாங்குகிறார்கள். இதன் இறுதி கட்டமாக கட்டப்பஞ்சாயத்து மற்றும் வன்கொடுமைகளில் நமது மக்கள் பாதிக்கும்போது எதிர் தரப்பிடும் பணம் பெற்று சோரம் போய்விடுகிற எல்லை வரை செல்கிறார்கள்.
கட்சி பொறுப்பாளர்கள் இப்படி தவறாக செல்வதை தடுக்கும்பொருட்டு உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தி, கீழ்மட்ட கட்சி பொருப்பாளர்கள் உள்ளாட்சிகளில் அதிகாரம் மிக்க பொறுப்புகளுக்கு அமர்த்த வேண்டும். அவர்கள் கான்ட்ராக்ட் போன்றவற்றில் ஈடுபட்டு பொருளாதார லாபம் அடைவார்கள். மேலும் சுய தொழில் தொடங்க ஊக்குவித்து தாட்கோ கடன் பெற்று பொருளாதார தன்னிறைவு அடைய வழி வகுக்க வேண்டும்.
கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தனது தொகுதி ஒப்பந்தங்களை நமது கட்சிகாரர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தமிழகம் முழுதும் ஆளும் கட்சியிடம் 50% சதவீதம் பெரும் ஒப்பந்தங்களை தலித் சமூக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களின் பொருளாதாரமும் உயரும்.
மேற்கண்ட விமர்சனம் கட்சியின் மீது சாதாரண மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இதனை கருத்தில் கொண்டு கட்சியின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தி தலைவர் ஆக்கப்பூர்வமாக பணிகளை தொடர்ந்து செய்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.



No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...