நம்மின தாத்தா, திவான்பஹதூர் தாதா திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தங்கவயலில் தன் பொற்பாதங்களை பதித்த நாள்தான் 30.6.1940. அதே நாளில் மாரிகுப்பம், சாக்கைய பௌத்த சங்கத்திற்கு வருகை புரிந்ததும் வரலாறு. அப்பொன்னாளின் 81வது நிறைவுநாள் தான் இன்று (30.6.2021).
அங்கிங்கெனாதபடி எங்கு வாழ்ந்தாலும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஆதி திராவிடர் என்றெல்லாம் விளிக்கப்பட்டு, இறுதியாக "செடியூல்ட்" என அதிகாரப் பூர்வமாக பெயர் சூட்டப்பட்ட, இந்தியாவின் பூர்வ குடிகளைக் கொண்ட ஒரே இனம் நம்மினமாகும். தம் மேல் திணிக்கப்பட்ட "தீண்டாமை" எனும் பெருநோயை எதிர்க்கும் விதத்தில், கோலார் தங்கவயலின் பல பகுதிகளில் இயக்கங்கள் ஏற்படுத்தி சிற்சில அளவில் நம் தலைவர்கள் பணியாற்றி வந்தனர்.
அப்பணிகளின் ஊடே, ராபர்ட்சன்பேட் ஆதி திராவிட ஜனசபாவினரால், கிங் ஜார்ஜ் ஹாலில் 30.6.1940 அன்று "ஆதி திராவிட மாநாடு" கூட்டப்பட்டது. அம்மாநாட்டில், ஆதியரின் அருந்தலைவரும், அண்ணல் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களுடன் லண்டன் வட்டமேஜை மாநாடுகளில் பங்கேற்று, ஆதியர்க்கு தனித்தொகுதி பெற்றுவந்தவருமான திவான்பஹதூர் தாதா திரு.இரட்டைமலை சீனிவாசன் M.L.C., F.M.U. அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அவரோடு தளபதி திரு. M.கிருஷ்ணசாமி, திரு.C.P.சின்னராஜி ஆகியோரும் உரையாற்றினர்.
அம்மாநாட்டினை சரியாக பயன் படுத்திக்கொள்ளும் விதத்தில், திரு.S.C.கணபதி அவர்களும், திரு.M.C.துரை அவர்களும் (இக்கட்டுரையாளர் துரை.ராஜேந்திரனின் தந்தை) திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களை சந்தித்து, ஒரே இனமான ஆதியர், கோலார் தங்கவயலில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என பல மொழிகளாலும், ஆத்திகர், நாத்திகர், என்ற பிரிவுகளாகவும், சைவர், வைஷ்ணவர், கிறிஸ்தவர், பௌத்தர், என பல மதத்தவர்களாகவும், இறைச்சியையும் சேர்த்து உண்போர், காய்கறியை மட்டும் உண்போர், எனவும், பறையர், பள்ளர், சக்கிலியர், என்ற உட்சாதிப்பிரிவுகளாலும், பல்வேறு பல்வேறு வகையில் பிரிந்து நின்று ஜாதி சழக்கர்களின் சூழ்ச்சிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும், விஞ்ஞானத்தை மறந்து, மூடநம்பிக்கைகளில் ஊறித்திளைத்து, சொற்ப வருமானத்தையும் சடங்காச்சாரங்கள் என்ற பெயரில் இழந்து நின்றதை விளக்கி ஒன்றுபட்ட ஓர் இயக்கத்தை துவங்க அவரது ஆலோசனையை வேண்டினர்.
அவரது ஆலோசனையின் விளைவுதான், தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி, பறையர், பள்ளர், அருந்ததியர் என்ற எந்த பிரிவினையும் இல்லாமல், திரு.R.முத்துசாமி, M.R.A. அவர்கள் முன்னிலையில், திரு.S.பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் 16.8.1942ல் துவங்கப்பட்ட, "மைசூர் சமஸ்தான ஷெடியூல்டு வகுப்பினர் கழகம், கோலார் தங்கவயல்" (The Mysore State Scheduled Castes Federation, K.G.F.) ஆகும். அதற்கு சட்ட திட்டங்களை தீட்டிக் கொடுத்தவர் பௌத்தப் பெரியார், பண்டிதமணி திரு.G.அப்பாதுரையார் ஆவார். திரு.P.M.சாமிதுரை உபதலைவர், திரு.இன்ஜினியர் M.முனிசாமி பொது காரியதரிசி, திரு.M.நாதமுனி, திரு.M.C.துரை, திரு.S.C.கணபதி ஆகியோர் கூட்டு காரியதரிசிகள், திரு.S. முனிசாமி பொருளாளர், திரு.R.முத்துசாமி, M.R.A., திரு.M.தனப்பால் ஆகியோர் போஷகர்கள். 8 கோடியில் 86 இனப்பிரிவுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட "சென்னை மாகாண ஷெடியூல்டு வகுப்பினர் தலைமை சங்கத்தோடு (The Madras Province Scheduled Castes Federation) இணைக்கப்பட்டது.
தலைவர்களின் வார்த்தைகளை தட்டாமலும், தனித்தனி அமைப்புகளாக பிரிந்து போகாமலும் இருந்ததால், பின்னாளில் தங்கவயலின் தங்கங்களான, திரு.P.M.சாமிதுரை, திரு.C.M.ஆறுமுகம், திரு.S.ராஜேந்திரன் ஆகியோரை கர்நாடக சட்டமன்றத்திற்கு தமது உறுப்பினர்களாக அனுப்பி, சாதனைகள் பல புரிய செய்தது.
நம்மின தாத்தா, திவான்பஹதூர் தாதா திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தங்கவயலில் தன் பொற்பாதங்களை பதித்த நாள்தான் 30.6.1940. அதே நாளில் மாரிகுப்பம், சாக்கைய பௌத்த சங்கத்திற்கு வருகை புரிந்ததும் வரலாறு. அப்பொன்னாளின் 81வது நிறைவுநாள் தான் இன்று (30.6.2021).
அந்நன்னாளை, நாமனைவரும் நன்றியுடன் நெஞ்சில் நிலை நிறுத்தி, அவர் காட்டிய வழியில் மீண்டும் நம் பொற்காலத்தை நோக்கி நடப்போமாக!

No comments:
Post a Comment