Sunday, July 11, 2021

மீன்கள் - புரட்சிப்பாவலர் தமிழ்ஒளி

புரட்சிப்பாவலர் தமிழ்ஒளி "கவிமலர்" இதழில் 1946 ஆம் ஆண்டு எழுதிய கவிதை
வான்கடல் தோன்றிடும்

முத்துக்களோ! - ஏழை
வாழும் குடிசையின்
பொத்தல்களோ!
மாநில மீதில்
உழைப்பவர்கள் - உடல்
வாய்த்த தழும்புக
ளோ அவைகள்?
செந்தமிழ் நாட்டினர்
கண்களெல்லாம் - அங்குச்
சேர்ந்து துடித்துக்
கிடந்தனவோ?
சொந்த உரிமை
இழந்திருக்கும் - பெண்கள்
சோக உணர்ச்சிச்
சிதறல்களோ?
இரவெனும் வறுமையின்
கந்தல் உடை - தனில்
எண்ணற்ற கண்களோ
விண்மீன்கள்?
அருந்தக்கூ ழின்றியே
வாடுபவர் - கண்ணீர்
அருவித் துளிகளோ
வான்குன்றிலே?
காலம் எழுதும்
எழுத்துக்களோ - பிச்சைக்
காரர் இதயத்தின்
விம்மல்களோ?
நீலக் கண்ணாடியின்
கோட்டையிலே - மின்னல்
நெளிவை இறைத்திட்ட
அற்புதமோ?
வெய்யில் அரசாங்கம்
வாட்டிடினும் - இருள்
வேலிகட்டி யிங்கு
வைத்திடினும்
பொய்யில் தொழிலாளர்
எண்ணமெல்லாம் - அங்குப்
பொங்கிக் குமுறி
இறைத்தனவோ?


பின்குறிப்பு:
பாரதி- பாரதிதாசனைத் தாண்டி உலகத் தொழிலாளர்களின் இயக்கமாகிய பொதுவுடைமைப் போர்க்களத்தில் களப்போர் வீரக் கவிஞனாக விளங்கியவன் தமிழ்ஒளி.!
- பன்மொழிப்புலவர் க.அப்பாத்துரையார்



No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...