Monday, June 14, 2021

கன்னட கவிஞர் சித்தலிங்கயாவுக்கு அஞ்சலி : பாலசிங்கம்


ர்நாடாக தலித் கவிஞர் சித்தலிங்கையா தனது 67 வயதில் கொரணா தொற்று காரணமாக ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.அவருக்கு மனைவி,ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்

கர்நாடாகத்தில் 1953 ல் பிறந்த சித்தலிங்கையா தனது வாழ்நாள் முழுவதும் கர்னாடாக தலித் மக்களின் முதன்மை குரலாக எதிரொலித்துயிருக்கிறார்
தலித் பாண்ட்யா என்ற இயக்கத்தையும் தோற்றுவித்தவர் சித்தலிங்கையா. 1974 ம் ஆண்டு பேராசிரியர் பி.கிருஷ்ணப்பா,தேவனரு மகாதேவ்,கே.பி.சித்தையாவுடன் இணைந்து சங்கரஸ் ஸ்மிதி என்ற தலித் அமைப்பையும் தோற்றுவித்து கர்நாடாக தலித் மக்களின் அரசியல் குரலாக எதிரொலித்துயிருக்கிறார்
1975 ல் சித்தலிங்கையா தனது முதல் கவிதை Hole Madigara hadu வாயிலாக தலித் மக்களின் சமரசமற்ற குரலாக எதிரொலித்துயிருக்கிறார்.இவர் இயற்றிய ikrala,odirla,yarige bantu தலித் கவதைகளே கர்நாடாகா தலித் மக்களுக்கான Anthem உள்ளது
1997 ல் சித்தலிங்கையா மூன்று கட்டங்களாக சுயசரிதை ooru Keri வெளியீ்ட்டார்.இந்த சுயசரிதை இந்திய நாட்டில் ஒரு தலித் கவிஞரின் சிறந்த சுயசரிதையாக உள்ளது
டாக்டர்.சித்தலிங்கையா பெங்களூர் பல்கலைகழகத்தில் கன்னடம் பேராசிரியராக இருந்துள்ளார்.1980 களில் கர்நாடாக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து தலித் மக்களின் குரலாக எதிரொலித்துள்ளார்.2019 ல் கர்நாடாக அரசின் உயர்ந்த விருதான பத்ம பம்பா எனும் விருது சித்தலிங்கையா அவர்களின் பணிக்காக வழங்கப்பட்டுயிருக்கிறது.1986 ல் ராஜ்யோத்சவா எனும் விருதும் சித்தலிங்கையா விருது வழங்கப்பட்டது.
2015 ல் 81 வது கன்னடா சாகித்ய சம்மேளாவையும் தமையேற்று நடத்தியுள்ளார் சித்தலிங்கையா.கர்நாடாக தலித் சமூகத்திற்காகவும் ஒட்டுமொத்த இந்திய தலித் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் விளங்கிய டாக்டர்.சித்தலிங்கையா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்



No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...