Monday, June 14, 2021

வன்கொடுமை செய்யும் அரசாங்கம் : ஸ்டாலின் தி

.


சென்னை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் 'பட்டியல் சமுகத்தவர்(Scheduled Castes)'என்று இருக்க வேண்டிய இடத்தில் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று இருக்கிறது.‌'பட்டியல் பழங்குடியினர்(Scheduled Tribes) என்று இருக்க வேண்டிய இடத்தில் 'மலைஜாதியினர்' என்று இருக்கிறது. இது மொழிபெயர்ப்பு அடிப்படையில் அறிவற்றத் தனமானது‌ மட்டுமல்ல, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களை அவமதிப்பதுமாகும். அந்தவகையில், இச்செயல் ஓர் தீண்டாமை வன்கொடுமை ஆகும்.‌ இவ்வன்கொடுமையை அரசே செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
அரசு கட்டடங்களில் தமிழ் வாழ்க என்று மின்விளக்குகளால் அலங்காரம் செய்துகொண்டால் மட்டும் போதாது. நெடுங்காவமாக அழமதிக்கப்பட்ட மக்களை அழைக்கும் சொற்களில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் அறிவும் ஓர் அரசுக்கு இருக்க வேண்டும். திமுக அரசு சமூக அறிவுடையோரின் ஆலோசனைகளை செவிக்கொடுத்துக் கேட்டு தம்மை திருத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்பதையே இச்செயல் காட்டுகிறது‌.
இந்த விண்ணப்பத்தை தயாரித்தவர்கள், அனுமதித்தவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திமுக அரசு, பகிரங்கமாக பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...