Wednesday, June 30, 2021

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை : தங்கை செல்வன்


" மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய போது, அதை உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்தினார்..."

மிழகத்தை உலுக்கிய பல்வேறு படுகொலை மற்றும் சாதிய வன்கொடுமை வழக்குகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடியவர் வழக்கறிஞர் அய்யா.பொ. ரத்தினம் அவர்கள்....
அரசாங்கத்தின் அச்சுறுத்தல், ஆதிக்கச்சாதிகளின் கொலைமிரட்டல், சந்தர்ப்பவாதிகளின் துரோகங்கள், பிழைப்புவாதிகளின் அவதூறுகள் ஆகிய எல்லாவற்றையும் மீறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்...
கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் நடத்திய நூற்றுக்கணக்கான வழக்குகளில் என் நினைவில் நின்றவைகளில் சில...
மதுரை மாவட்டம், சென்னகரம்பட்டி கிராமத்தில் குத்தகை உரிமை கேட்டதற்காக அம்மாசி - வேலு என்கிற இருவர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கை நடத்தி அந்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைப் பெற்றுத்தந்தார்...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காட்டுக்கூடலூர் சேரியில் 110வீடுகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அந்த வழக்கை நடத்தி அம்மக்களுக்கு நீதியும், நிவாரணமும் பெற்றுத்தந்தார்..
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பாச்சாரப்பாளையம் சேரி சூறையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காக வழக்கறிஞர் வைத்தீஸ்வரன் அவர்களை மனுதாரராக கொண்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து அம்மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க காரணமாக இருந்தார்...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பத்திரக்கோட்டை சேரி சூறையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து அந்த மக்கள் நீதியும், நிவாரணமும் பெறக் காரணமாக இருந்தார்...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கோ.ஆதனூர் பொன்னுருவி படுகொலை வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத்தந்தார்..
அதே கோ.ஆதனூர் பொன்னுருவியின் குடும்பத்தினர் மீது போடப்பட்ட கொலை வழக்கில் இருந்து, பொன்னுருவியின் குடும்பத்தை காப்பாற்றினார்...
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், புதுக்கூரைப்பேட்டை கண்ணகி-முருகேசன் படுகொலை வழக்கை நடத்தி வருகிறார். அந்த வழக்கு வரும் ஜீலை 2-ந்தேதி தீர்ப்புக்காக இருக்கிறது....
திவ்யா-இளவரசன் காதல் பிரச்சனையில் தர்மபுரியில் மூன்று சேரிகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் நடத்திடவும், அந்த மக்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தார்...
தின்டிவனம் ரீட்டாமேரி வழக்கு, திருச்சி திண்ணியம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்கள் நீதியும் நிவாரணமும் பெற காரணமாக இருந்தார்....
மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய போது, அதை உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்தினார்...
மதுரை நீதிமன்றத்தில் நடந்த மேலவளவு வழக்கை சேலத்திற்கு மாற்றி, அந்த சாட்சிகளை பாதுகாத்து, கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்த வழக்கை நடத்தி அந்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தார்...
கடந்த அதிமுக ஆட்சியிலும், அதற்கு முந்தைய திமுக ஆட்சியிலும் மேலவளவு கொலையாளிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த விடுதலையை எதிர்த்து தற்போது வழக்கு நடத்தி வருகிறார்...
இன்று மேலவளவு போராளிகளின் நினைவுநாள். அந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திட அய்யாவுக்கு அனுமதி மறுத்திருக்கிறது திமுக அரசு. அதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து காத்திருக்கிறார் இந்த மனிதநேயர். நீதி வெல்லும்...



No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...